பாகிஸ்தான் ரசியாவிடமிருந்து இருந்து கச்சா எண்ணெய்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்து வருகிறது. உடன்படிக்கை ஒன்றின் ஊடாக இரு நாடுகளும் கச்சா எண்ணையை சந்தை பரிமாற்றம் செய்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு ரசியா கச்சா எண்ணெய் வழங்க இருப்பதாக ரசியா பெற்றோலியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ரசியாவின் கச்சா எண்ணெய் வாங்க மேற்கத்திய நாடுகள் கட்டுப்பாடுகளையும் விலை வரம்பையும் அறிவித்துள்ளதால், கச்சா எண்ணெயை விற்பனை செய்ய ரசியா புதிய சந்தைகளை நாட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ரஷியாவுடன் உடன் பாட்டில் உள்ள சமயம் அவற்றை தொடர்ந்து பாகிஸ்தானும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளது.