சட்டவிரோதம் என முத்திரை குத்தப்பட்ட கட்டுரைகளை வெளியிட்டதாக விக்கிபீடியா மீது ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் போரில் ரஷியாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை, ரஷிய ஆயுதப்படை போன்றவற்றை இழிவுபடுத்தும் கட்டுரைகள் உள்ளிட்ட 137 வகையான செயல்களை அந்த நாட்டின் அரசாங்கம் சட்ட விரோதம் என முத்திரை குத்தியுள்ளது.
ஆனால், இந்தப் போருக்கு பிறகு ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை விக்கிபீடியா கொண்டுள்ளதாக அதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன் ஒருபகுதியாக ரஷியாவால் சட்டவிரோதம் என முத்திரை குத்தப்பட்ட அந்தக் கட்டுரைகள் விக்கிபீடியா இணையதளத்தில் காணப்பட்டது.
இதற்காக விக்கிபீடியா நிறுவனத்துக்கு ரஷியா நீதிமன்றம் இதுவரை சுமார் ரூ.12 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும், அந்த கட்டுரைகளை விக்கிபீடியா நிறுவனம் இன்னும் தனது இணையதள பக்கத்தில் இருந்து நீக்கவில்லை என ரஷியாவின் ஊடக கண்காணிப்பாளர் ரோஸ்கோம்நாட்ஸோர் தெரிவித்துள்ளார்.