செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியங்களும் பேராதரவு!

ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியங்களும் பேராதரவு!

1 minutes read

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் தமிழர் தாயகத்தில் முன்னெக்கப்படும் பௌத்த – சிங்கள மயமாக்கலை எதிர்த்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக கலைகலசார பீட மாணவர் ஒன்றியம், இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தெரிவித்துள்ளன.

“ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவு உண்டு. இதனை முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகள் வெறுமனே கதவடைப்புடன் மாத்திரம் தமது எதிர்ப்புக்களை சுருக்கிவிடாது தொடர்ச்சியாக மக்கள் மயப்படுத்திய போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்” – என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார்.

“தமிழர்களின் இருப்பை நசுக்கவும் போராட்டச் சிந்தனையை முற்றாக இல்லாது செய்யவும் 30 வருடங்களாக நடைமுறையிலிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஜனநாயகத்தை மீறியவகையில் பலவாறாக எம்மைப் பாதித்தது. இதனை நிறுத்துவதை விடுத்து இதற்கு மேலாக நடைமுறைக்கு வரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரச இயந்திரத்தின் சதிச்செயலாகும். இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவை வழங்குகின்றோம்” – என்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சில்வெஸ்டார் ஜெல்சின் தெரிவித்தார்.

“தொடர்ச்சியாக எமது மாணவர் சமூகத்தை நசுக்குகின்ற ஒரு சட்டமான இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் எத்தனை உருமாறி வந்தாலும் அது ஆபத்தானதே. நாளைமறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களாகிய எமது பூரண ஆதரவு உள்ளது” – என்று கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

“தெற்கிலே நாளை 24ஆம் திகதி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கின்றது. இந்நிலையில் வடக்கு – கிழக்கில் இவ்வாறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பூரண ஹர்த்தாலுக்கும் நாம் ஆதரவளிக்கின்றோம்” – என்று இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More