0
பக்கத்தில்
பார்த்து எழுதியவன்
தேர்ச்சி
பெறும் தந்திரத்தை
வாழ்த்துவதும்,
பெருமைக்கு
முனைபவன்
வயிற்றில், இருக்கும் உணவை எடுப்பதும்.
பார்த்து எழுதியவன்
தேர்ச்சி
பெறும் தந்திரத்தை
வாழ்த்துவதும்,
பெருமைக்கு
முனைபவன்
வயிற்றில், இருக்கும் உணவை எடுப்பதும்.
கற்பக ஓவியன்
தார் ரோட்டில் வரைவதும் அந்தோ கலைக்கோட்டில்
விழும் சில்லறை பார்த்து பொறாமை கொள்வதும்,
நதியின் கரையில்
வாளி நீரில்
குளிப்பது போல்
அனுபவ அசைவின்றி இலக்கியங்கள்
சபையை சூழ்வதும்,
குலம்
பார்த்து
திறனான்
செம்மை நோக்கினை
பாராது
இகழ்வதும்,
யாவும் நிகழ்ந்தாலும்
அவையாவும் உயரே
பறந்தாலும்
ஒரு பறவை
வேறு
காகிதப் பட்டங்கள்
வேறு..
சீனு ராமசாமி