ஒவ்வொரு நாளையும் சிறப்பாக மாற்றிக் கொள்வது மிக சிறந்தது .வேலை நாளாக இருந்தாலும் சரி, விடுமுறை நாளாக இருந்தாலும் சரி..
காலையில் அதிக நேரம் தூங்காது விரைவாக எழுந்துவிட வேண்டும்.
முதல் வேலையாக இறைவனை வணங்கி பிரார்திப்பதை செய்து முடிக்க வேண்டும். அது மனதிற்கு நிம்மதியாக இருக்கும்.
அடுத்து உடலை உற்சாகப்படுத்தும் யோகா, ஜாகிங், உடற்பயிற்சி போன்றவற்றுக்கு சிறிய நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.
வெளியே சில்லென்ற காற்று, பறவைகளின் ஒலி, பல வண்ண மலர்கள், நீல வானம் என்று இயற்கையை கொஞ்சம் ரசிக்கலாம். அது மன அழுத்தங்களை குறைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக என்னை நானே விரும்ப வேண்டும். நம்பிக்கை கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து முன்னேற்றத்திற்கான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும் அவர்களுடன் எம்மை ஒப்பிட்டு மனம் தளராமல் இருக்க வேண்டும். அதற்காகவே தினமும் நேர்மறை எண்ணங்களுடன் எமது நாளை ஆரம்பிக்க வேண்டும்.
மேலும், கொலை, கொள்ளை போன்ற விடயங்களால் நிறைத்து வைத்திருக்கும் செய்தித் தாள்களை விசிப்பதையும்..
பழிவாங்கள்களும், அழுது வடிக்கும் காட்சிகளும் நிறைந்த எவ்வித கருப்பொருளும் இல்லாத மெகா சீரியல்களை பார்ப்பதை தவிர்த்துக் கொள்வதும் மிகவும் சிறந்தது.
மேலும், மூட நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்றுங்கள். ஒரு பணி நிமித்தம் வெளியே போகின்றீர்களா? அப்போது எதிரில் பூனை வந்தால் என்ன? வேறொன்று வந்தால் என்ன? அதை பற்றி மனதை வருத்திக் கொண்டால் அன்று முழுவதும் உங்களுக்கு கெட்டது நடப்பது போல் தான் இருக்கும். காரணம் நம்பிக்கை. ஆழ் மனதில் அது பதிந்து விடுவது தான் காரணம்.
எனவே, நடப்பது எதுவானாலும் அதில் நன்மை உண்டு என்ற நேர்மறை எண்ணத்தை ஆழ்மனதுக்கு ஒட்டி விட்டால் அன்றைய தினம் சிறப்பாக அமையும்.