தாய்லாந்தை சேர்ந்த 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது காதலன் மற்றும் தோழி உட்பட மொத்தம் 12 பேரை சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால், கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நான்கு மாத கர்ப்பிணி மேற்படி கொலை குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டிலிருந்து இந்த்க் கொலைகள் நடந்துள்ளன என தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைகளுக்கான காரண பணம் தான் என்று தாய்லாந்து பொலிஸார் நம்புகிறார்கள்.
குறித்த பெண் முன்னர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
மூலம் – பிபிசி