பழக்க வழக்கங்களின் அடிப்படையிலான நோய்களில் மூல நோயும் ஒன்றாகும். மூலநோய் வந்து விட்டால் நம்முடைய குணாதிசயமே சிடுசிடுவென்று மாறும் அளவிற்கு நம்மை எந்நேரமும் கஷ்டப்படுத்தும் ஒரு நோயாகும்.
சித்த மருத்துவத்தில் மூலத்தை பல வகைகளாக பிரித்தார்கள்.
அவைகள்..
நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம்,மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரகமூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.
இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும்.சொன்னார்கள்…
இதில் குறிப்பிட்ட நவமூலத்தையும் குணப்படுத்தக் கூடிய சக்தி பிரண்டை உப்பிற்கு உண்டு (Ref: போகர் நிகண்டு). பிரண்டை உப்பை சித்த முறைப்படி தினமும் காலை மாலை இருவேளையும் 300mg அளவிற்கு சாப்பிட்டு வரும் போது 2 முதல் 3 மாதங்களில் எந்த ஒரு ஆபரேசனும் இல்லாமல் நவமூலமும் குணமாகும்.