0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினமும் பேச்சு நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது.
இந்தநிலையில், இன்று இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்படவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறும்.