கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை – வாரியபொல பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
வாரியபொல பிரதேசத்தில் வயல் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிரம்பிய புதைக்குழியொன்றிலிருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இருவரும் நேற்றுமுன்தினம் (10) முதல் காணாமல்போயிருந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.