இப்போது எங்கு பார்த்தாலும் யூடியூப் மோகம் அதிகரித்த வண்ணம் உள்ளது . கலிபோர்னியாவில் விமானத்தை மோதி விபரீதம் ஒன்றை யூடுயூபர் செய்துள்ளார். யூடியூபில் அதிக பார்வையாளர்களை கவர்வதற்காக, சிறிய விமானத்திலிருந்து கீழே குதித்து அதனை வீடியோவாக வெளியிட்டதோடு, விமானத்தை மோத வைத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 29 வயதான ஜேக்கப் 2019ம் ஆண்டு “நான் எனது விமானத்தை மோத வைக்கப் போகிறேன்” என்ற தலைப்பில் யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்தார்.
ஒற்றை என்ஜின் கொண்ட விமானத்தை அவர் இயக்கிக் கொண்டே காட்டுப்பகுதிக்குச் சென்று விமானத்திலிருந்து பாராசூட் மூலமாக கீழே குதித்தார். இயக்குவதற்கு ஆளில்லாததால் விமானம் தரையில் மோதி விபத்திற்குள்ளானது.
இவை அனைத்தையும் கேமராக்களை பொருத்தி ஜேக்கப் ஒளிபரப்பு செய்தார். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக அவர் மீது விமான போக்குவரத்து நிறுவனம் தொடர்ந்து வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.