“தேசிய அரசு பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசவில்லை. முழு நாடாளுமன்றமும் அரசுக்காக வேலை செய்ய வேண்டும் என்றுதான் கூறினார்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
‘தேசிய அரசு தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசுடன் இணைய விரும்புபவர்கள் அவர்களது கட்சியுடன் வந்து சேர முடியும் என்று ஜனாதிபதி கூறினார். அப்படி முடியாதுவிட்டால் தனியே வர முடியும் என்று அறிவித்தார்.
அப்படியும் முடியாதுவிட்டால் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே அரசுக்கு வேலை செய்யலாம் என்றார். அதற்கான குழுக்களை நிறுவி பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுப்போம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.” – என்றார்.
‘உங்களது கட்சி அரசுடன் இணையுமா?’ என்ற கேள்விக்கு மனோ எம்.பி. பதிலளிக்கும் போது, “அப்படியான தீர்மானம் இல்லை” என்று கூறினார்.