கம்பளையில் காணாமல்போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் சடலம் இன்று மதியம் தோண்டி எடுக்கப்பட்டது.
22 வயதான இளம் யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த 7 ஆம் திகதி முதல் காணாமல்போனார் எனக் கூறப்பட்ட கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற யுவதியைக் கொலை செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
குறித்த யுவதியைக் காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொலை செய்ததாக அவர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, இன்றைய தினம் சந்தேகநபர், குறித்த யுவதியின் சடலத்தைப் புதைத்த இடத்தை நேரில் அடையாளம் காட்டினார்.