லிவர்பூலில் நடைபெற்ற 67வது யூரோவிஷன் பாடல் போட்டியின் இறுதி விழாவை பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தொடங்கி வைத்தார்.
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரத்தில் 67வது யூரோவிஷன் பாடல் போட்டியின் இறுதி விழா நடைபெற்றது.
6000 பேர் வரை இருந்த அரங்கத்தில் இடம்பெற்ற இந்த யூரோவிஷன் நிகழ்ச்சியை 160 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பார்வையிட்டனர்.
இந்த நிலையில், பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், பியானோ வாசிக்கும் சிறப்பு வீடியோ ஒன்றில் தோன்றி, 67வது யூரோவிஷன் பாடல் போட்டியின் இறுதி விழாவை தொடங்கி வைத்தார்.
இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் கேட் பியானோ இசைத்ததுடன், இந்த சிறப்பு வீடியோ வின்ட்சர் கோட்டையில் இந்த மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அந்த வீடியோவில் இளவரசி கேட் மிடில்டன் ராயல் நீல நிற உடையில் இருந்தார்.