தந்தை ஒருவர் தனது மகனைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தந்தை மற்றும் மகனுக்கிடையில் வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில் தந்தை கத்தியால் மகனின் கழுத்தில் வெட்டியதைத் தொடர்ந்து மகன் மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்துள்ளார்.
பலத்த காயத்துடன் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட மகன் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வழியில் மரணம் சம்பவித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
21 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
65 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.