சிவப்பாய்
சிதறிக் கிடக்கின்றன
சுவர்களில்
இவனின் கனவுச் சிதறல்கள்
உயிரோடு எரிந்தழிந்த வீரமாய்
விடைபெற்றுச் சென்றது
வீரனின் வரலாறு
இருந்தாலும்
யுகங்கள் கழிந்தாலும்
உலகச்சக்கரம்
தர்மத்தின் வழியில்
சுற்றாது விடினும்
தவம் கிடந்த கல்லறைகளில்
தர்மம் ஒரு நாள்
வெல்லத்தானே வேண்டும்
பிய்த்து எறியப்பட்ட
கல்லறைகளின் குருதியில்
உயிர்த் திரியில் தீமூட்டி
உன் முகம் தேடுகின்றேன்
காலப் பெருவெளியில் கிடக்கும்
கல்லறைகளில் தீ மூட்டி
கனவுகளைத் தேடுகின்றேன்
என் மூதாதையினன்
விட்டுச் சென்ற
முடிவில்லா வரலாற்றின்
நந்திக் கடலிருந்து
நாளைய வரலாற்றை தேடுகின்றேன்
அதுவே எனது அடையாளம்
அதுவே எனது வாழ்வு
அதுவே எனது விடுதலை
பா.உதயன்