செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்

1 minutes read

முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வியாழக்கிழமை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிகரை வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் அவ் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மே 18 ஒட்டிய ஒரு வாரம் முள்ளிவாய்க்கால் தினமான வாரம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் துக்கமான கரி வாரமாக தமிழ் மக்களால் அனுஷடிக்கப்பட்டு நினைவு கூர்ந்துவரும் இந்த வேளையிலே இலங்கை அரசு தன்னுடைய போர் வெற்றியை கொண்டாடி வருகின்றது.

2009 மே 18 காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பொதுமக்கள் இந்த வாரத்தில் கொல்லப்பட்டதாக முன்னாள் மன்னார் ஆயர் யோசப் இராயப்பு தகவல் வெளியிட்டார்.

கிட்டத்தட்ட இந்த போர் தொடங்கிய காலமிருந்து 3 இலட்சம் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் பல தலைவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும் இந்த முள்ளிவாய்க்கால் வாரத்தை நாங்கள் வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம். அதனடிப்படையில் இந்த ஆண்டும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சிங்கள பேரினவாத இனவாதியான சரத்வீரசேகர இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த நினைவு தினத்தையிட்டு இடம்பெறும் ஊர்தி பவனி மற்றும் விளக்கேற்றல்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்கள் போன்றவை எவை எதற்காக என்ற கேள்வி எழுப்பியிருந்தார் ?

உண்மையிலே எங்கள் மக்கள் எங்களுக்காக உயிர் நீத்தவர்களுக்கு நினைவு கூரவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது அந்தவகையில் நாங்களும் ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த இரண்டு வருடங்கள் கொரோனாவினால் அலுவலகங்கள் வீடுகளில் நினைவு கூர்ந்தோம் இருந்தபோதும் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியம் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நாளை 18 ம் திகதி மாலை 5 மணிக்கு நினைவு கூற ஏற்பாடு செய்துள்ளோம்.

எனவே இந்த நினைவேந்தலில் இனமத சமய வேறுபாடுகளின்றி ஒரு உணர்வுபூர்வமான தமிழ் பேசும் மனிதனாக தமிழினத்திற்காக தமிழினத்தின் உரிமைக்காக போராடிய இனமாக இதை நினைவு கூருவதற்கு அனைவரும் ஒத்துழைத்து கல்லடி கடற்கரைக்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More