இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகப் பொருட்களைக் கொண்டுவந்த படகு ஒன்றை, புத்தளம் – சின்ன அறிச்சாறு பகுதியில் வைத்துக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக கடலட்டைகள் கொண்டுவரப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்றிரவு சின்ன அறிச்சாறு கடற்கரைப் பகுதியில், கற்பிட்டிக் கடற்படையினர் படகு ஒன்றைச் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, 193 கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் உள்ளிட்ட பல பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.