இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கிற்கு இங்கிலாந்து அரசாங்கத்திற்கு சுமார் £162 மில்லியன் ($201.4 மில்லியன்) செலவானது என்று கருவூலம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நீண்ட காலம் பதவியில் இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, செப்டெம்பர் 08, 2022 அன்று 96 வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் காலமானார்.
10 நாள் தேசிய துக்கம் அனுஸ்டிக்கப்பட்டு, செப்டெம்பர் 18 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.
துக்கக் காலத்தில் இலண்டனில் இங்கிலாந்து ராணியின் உடலை 250,000 பொதுமக்கள் பார்த்தனர். பலர் இலண்டன் தெருக்களில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்றனர்.
அவர் பெர்க்ஷயரின் விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அரசாங்கத் துறைகளுக்கான செலவுகள் உள்துறை அலுவலகத்திற்கு £73.68 மில்லியன், கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கு £57.42 மில்லியன், போக்குவரத்துத் துறைக்கு £2.565 மில்லியன், £2.096 மில்லியன் வெளியுறவு அலுவலகம், மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு £2.89 மில்லியன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் ஒரு மெதுவான ஊர்வலம் மற்றும் ஒரு நாள் அஞ்சலி நிகழவுக்கு ஸ்காட்லாந்தில் அரசாங்கத்தின் செலவு £18.756 மில்லியன் ஆகும்.
ராணியின் வாரிசும் மகனுமான மூன்றாம் சார்லஸ், மே 6 அன்று மூன்று நாள் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, 50 மில்லியன் பவுண்டுகள் முதல் 100 மில்லியன் பவுண்டுகள் வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டு, முடிசூட்டப்பட்டார்.