தேவியின் 51 சக்தி பீடங்களில் காஞ்சி காமாட்சி பீடமும் ஒன்று ஆகும். கா என்றால் விருப்பம் என்று பொருள் மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்பதையே காமாட்சி அம்மன் விளக்கி நின்றார். பண்டா அசுரனை அழித்து பக்தர்களுக்கு காட்சி அளித்த பீடமே இது ஆகும்.
ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தில் பிரதிட்சை செய்தார் . ஸ்ரீ காமாட்சி அம்மன் என்பதில் ஸ்ரீ என்பது லக்ஷ்மியின் அம்சத்தை குறிக்கின்றது. அவரை வழிபடுபவருக்கு ஐஸ்வர்யம் அனைத்தையும் அள்ளி வழங்குவார். கொடுத்து வாரா கடனும் திரும்பி வரும்.
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான்கள் காமாட்சி அம்மனை போற்றி பாடியுள்ளனர். கிருதயுகத்தில் துருவாசகரால் 2000 சுலோகங்கள் ,திரேதாயுகத்தில் பரசுராமரால் 1500 சுலோகங்களும் ,துவாபார யுகத்தில் தவ்மி சாரயரால் 1000 சுலோகங்களும் கலியுகத்தில் ஆதி சங்கரராக் 500 சுலோகமும் பாடியுள்ளார். போற்றி வழிப்பட்டார்கள் .
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் சென்றால் அனைத்து அம்மன் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும் என்பது கூற்று எனவே கருவறையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் தாயாரின் திருவுருவை கண்டு சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்.