அமெரிக்காவில் 16 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியிலுள்ள உயர்நிலை பாடசாலையொன்றில் ட்ரேசி வாண்டர்ஹல்ஸ்ட் (38) என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது வகுப்பில் பயிலும் 16 வயது மாணவர் ஒருவரோடு, தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் பாடசாலை நிர்வாகம் இணைந்து விசாரணை நடத்தியது.
அத்துடன், அந்த ஆசிரியை செய்த குற்றத்திற்கான ஆதாரங்களை, சிசிடிவி மூலம் சேகரித்து பொலிஸாரிடம் பாடசாலை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.