ஈரானில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண், பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஈரான் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாஷா அமீனியின் கல்லறை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸில் செயற்பட்டு வரும் குர்திஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதாவது: “மாஷா அமீனியின் உடல் குர்திஸ்தான்
மாகாணத்திலுள்ள அவரது சொந்த ஊரான சகேஸில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கல்லறையைச் சுற்றிலும் போராட்டக்காரர்கள் கூட்டம் நடத்துவதை அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.
“இச்சூழலில், மாஷா அமீனியின் கல்லறை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கல்லறை மீது அமைந்துள்ள அமீனியின் படத்தைப் பாதுகாத்து வந்த கண்ணாடி நொறுங்கியுள்ளது” என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.