மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பஸ் – லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டூவாலா- ஈடியா நெடுஞ்சாலையில் பயணித்த பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். லிட்டோரல் பகுதி அருகே சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் எதிரே வந்த லொறி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.