அமெரிக்காவின் வாஷிங்டன் (Washington) மாநிலத்தில் காரில் மறந்து விடப்பட்ட 1 வயதுக் குழந்தை அதிக வெப்பத்தால் உயிரிழந்தது.
நிறுத்திவைக்கப்பட்ட அந்தக் காருக்குள் குறித்த குழந்தை சுமார் 9 மணிநேரம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் வளர்ப்புத் தாய் வேலைக்குப் புறப்பட்டபோது காலை 8 மணிக்கு காரை நிறுத்திவிட்டுச் சென்றதுடன். மாலை 5 மணிக்கு வேலை முடிந்த பிறகுதான் குழந்தையை மறந்து காரில் விட்டுவந்ததை அவர் உணர்ந்தார்.
இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அதனைக் காப்பாற்றமுடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அன்றைய நாளில் வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸுக்கும் 75 டிகிரி செல்சியஸுக்கும் இடையில் காணப்பட்டதுடன், காருக்குள் வெப்பநிலை சுமார் 110 டிகிரி செல்சியஸாய் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவில் அதி வெப்பத்தால் இந்த வருடத்தில் நான்கு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் சராசரியாக 38 பேர் உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.