5
உக்ரைனின் பக்ஹ்முட் நகரை முழுவதும் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பக்ஹ்முட் நகரை மீட்க உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது.
15 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து மிக நீண்ட, மிக மோசமான போருக்குப் பிறகு கடந்த மாதம் கிழக்கு நகரத்தில் ரஷ்யப் படைகள் வெற்றியை அறிவித்தன.
எனினும், உக்ரேனிய படையினர் பின்வாங்கவில்லை. பக்ஹ்முட் மேற்கு எல்லைகளில் இருந்து சண்டையைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.