செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா விமானத்தில் பயணிகளின் மூர்க்கத்தனம் அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

விமானத்தில் பயணிகளின் மூர்க்கத்தனம் அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

0 minutes read

விமானத்தில் பயணிகள் மூர்க்கத்தனமுடன் நடந்துகொள்வது, கடந்தாண்டு உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பின் (International Air Transport Association) ஆய்வில் தெரியவந்துள்ளது.

விமானங்களில் பயணம் செய்யும்போது, சக பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் தகாத முறையில் பேசுவது மற்றும் நடந்து கொள்வது போன்ற விமான பயண விதிமீறல்கள் நடக்கின்றன என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, கழிவறையில் சிகரெட் பிடிப்பது, மதுபானம் குடிப்பது மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் சர்வதேச அளவில் நடந்துள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி ஆய்வின்படி, 2022ஆம் ஆண்டில் ஒவ்வொரு 568 விமானங்களுக்கு ஒரு சம்பவம் என்ற கணக்கில் மூர்க்கத்தனமுடன் பயணிகள் நடந்து கொள்வது பதிவாகி உள்ளது. இது, 2021ஆம் ஆண்டில் ஒவ்வொரு 835 விமானங்களுக்கு ஒரு சம்பவம் என்ற அளவிலேயே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More