துன்பத்தில் இருந்து விடு பட வேண்டும் என்பதே ஒவ்வொரு உயிரின் விருப்பம் ஆனால் அது சாதாரணமாக நடக்கப்போகும் ஒன்று இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
அதற்கு சில வற்றை நாம் கடைபிடித்தே ஆக வேண்டும் . அப்படி கடைபிடித்தால் மாத்திரமே துன்பத்தில் இருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.
எந்த நிலையிலும் இறைவனை சரணாகதி அடைந்தவர்கள் அதாவது நாம் எந்த சந்தர்ப்பத்திலும் முழுமையாக இறைவனே கதி என்று முழுமையாக நம்ப வேண்டும்.
எந்த சூழலிலும் கோபம் முன் கோபம் படுதல் ஆகாது இந்த கோபத்தின் விளைவை நாம் தான் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் .
என்ன தான் நடந்தாலும் அமைதியாக இருத்தல் வானமே இடிந்தாலும் பொறுமை அதனை கடை பிடித்தபடியே இருத்தல்.
நாம் செய்த தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ள இது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும் சிலர் இதனை ஏற்பதே இல்லை இதுவே அவர்களின் துன்பங்களுக்கு காரணம் இதுவே
இறைவன் கொடுத்ததை போதும் என்ற மனம் ஒருவனுக்கு தோன்றினாலே அவன் துன்பத்தில் இருந்து முழுமையாக விடுபடலாம்.
இரக்கம் காட்டுதல் எந்த சூழலிலும் பிறரை மன்னித்தல் இவை இருந்தால் ஒருவரை துன்பங்கள் தீண்டாது
என்று யோகிகள் சொல்வதுண்டு .