விவேகானந்தர் மக்களை நெறிப்படுத்த நல்லபல ஆன்மீக சிந்தனைகள் தந்து சென்றுள்ளார் அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.
நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சூட்சுமமாக நம்மையே வந்து சேரும்.
யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயற்சிக்காதீர்கள் வேண்டும் என்றால் மேலும் ஒரு நம்பிக்கையை அவனுக்குள் செலுத்துங்கள்
இயற்கைக்கு கீழ் படியாமல் இருப்பது தான் மனித குலத்தின் வெற்றி .
தைரியமாக இருத்தல் விதியை நிர்ணயிக்கும் சக்தியை பெறலாம் .
நல்ல செயல்களுக்கும் இதய பூர்வமான செயல்களுக்கும் இறைவனே முன் நின்று உதவுவார்.
தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால் மனதை வலிமையை நிலைப்படுத்தி மீண்டும் முயற்சியை தொடருங்கள்.
விடாமுயற்சியுடன் செயலை நிறைவேற்றி மகிழ்வதே பெரும் வெற்றிக்கான வழியாகும்.
பெரியவர்கள் பெரிய தியாகங்களை செய்கிறார்கள் இதனால் வரும் நன்மைகளை மனித குளம் அனுபவிக்கின்றது.
இரக்கமுள்ள இதயம் ,சிந்தனையாற்றல் படைத்த மூளை வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்கு தேவை
சண்டை போடுவதிலும் குறை கூறிக்கொண்டு இருப்பதிலும் என்ன இருக்கிறது நிலைமையை சீர்ப்படுத்த அவை உதவ போவதில்லை
நமது எண்ணங்களே உலகை அழகானதாகவும் அவலட்சணமுடையதா கவும் மாற்றுகிறது .