ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் அழிக்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“வங்குரோத்து நிலையில் இருந்து எமது நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே மீட்டார். அன்று முதல் இன்று வரை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான். அந்தக் கட்சியை அழிக்கவே முடியாது.
தற்போது தேசப்பற்று குறித்து கதைப்பவர்கள், தேசம் ஆபத்தில் இருந்த போது பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால், ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காகச் சவாலை ஏற்றார்.” – என்றார்.