நைஜீரியாவைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர், மிக நீண்ட நேரம் தனியாக ஓய்வின்றி சமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
26 வயது ஹில்டா பாச்சி, 93 மணி நேரம், 11 நிமிடங்களுக்கு நின்றபடியே சமைத்தார். 4 நாட்கள் சளைக்காமல் அந்த முயற்சியில் ஈடுபட உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்ததாகப் பாச்சி கூறினார்.
நைஜீரிய உணவை உலகெங்கும் மக்கள் உண்டு மகிழ வேண்டும் என்பதற்காகச் சாதனை முயற்சியில் இறங்கியதாக அவர் கூறினார்.
இதற்குமுன் இந்தியாவைச் சேர்ந்த சமையல்காரர் ஒருவர் 87 மணிநேரம், 45 நிமிடங்களுக்குத் தனியாகச் சமைத்து கின்னஸ் சாதனையைப் புரிந்திருந்தார்.