உகாண்டாவில் பாடசாலை ஒன்றில் புகுந்த போராளி குழுவின் அட்டகாசம். தாக்குதலில் 38 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள ஏ.டி.எஃப். அமைப்பினர் அண்டை நாடான காங்கோவில் பதுங்கியபடி உகாண்டாவில் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் காங்கோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள கஸஸே மாவட்டத்திலுள்ள உயர்நிலை பள்ளிக்குள் புகுந்த ஏ.டி.எஃப். போராளிகள் துப்பாக்கியால் சுட்டும், பட்டா கத்தியால் வெட்டியும் கண்மூடித்தனமாகத் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மாணவர்கள் 38 பேரும், பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்தனர்.
மாணவர் விடுதிக்கு தீ வைத்த போராளி குழுவினர், ஏராளமான மாணவர்களை அங்கிருந்து கடத்திச் சென்றனர். தற்போது அவர்கள் காங்கோ நாட்டின் Virunga உயிரியல் பூங்காவில் பதுங்கியுள்ளதாக உகாண்டா ராணுவம் தெரிவித்துள்ளது.