பிரான்ஸ் பெண் அதிகாரி ஒருவர் மழையின் நனைந்தமையால் பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிரான்ஸுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது, பாரீசில் காரில் சென்றிறங்கியபோது மழை தூறி கொண்டிருந்தது. அவரை நனைந்து விடாமல் பாதுகாப்பாக அழைத்து செல்ல பெண் அதிகாரி ஒருவர் முன்வந்துள்ளார்.
காரை விட்டு ஷெபாஸ் இறங்கியதும், பெண் அதிகாரியிடம் ஏதோ கூறி விட்டு அவரிடம் இருந்த குடையை வாங்கின் கொள்கிறார். பின்னர் விரைவாக நடந்து சென்று விட்டார்.
பாதி தூரம் வந்த அந்த பெண் அதிகாரி, வேறு வழியில்லாமல் மழையில் நனைந்தபடி நடந்து சென்றார். இந்த வீடியோ வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சிலர், இது ஷெபாசின் எளிமை எனக் கூறியுள்ளனர். அவர் தனது குடையை அவரே சுமந்து செல்கிறார் என்றும் அது அவரது நல்லெண்ணம் என குறிப்பிட்டபோதும், மற்றவர்கள் அவரது நல்லெண்ணத்தினால், அந்த பெண் அதிகாரி மழையில் நனைந்தபடி நடந்து செல்கிறார் என்று குறையாகவும் கூறியுள்ளனர்.
Prime Minister Muhammad Shehbaz Sharif arrived at Palais Brogniart to attend the Summit for a New Global Financial Pact in Paris, France. #PMatIntFinanceMoot pic.twitter.com/DyV8kvXXqr
— Prime Minister's Office (@PakPMO) June 22, 2023