2
கறுப்புச் சட்டை அணிந்து
பகுத்தறிந்தால்
காவி உடை உடுத்தி பக்தியறிந்தால்
சிவப்பு நிறத்தில்
பொதுவுடமையறிந்தால்
கட்சி கொடியோடு
காலம் கடத்தியிருந்தால்
மதத்தில் மூழ்கி
மதம் பிடித்திருந்தால்
அதிகாரத்தின் அடிவருடி
கவிதை பொழிந்திருந்தால்
சதிகார செயலுக்கு
பாடல் வடித்திருந்தால்
ஆனால்
நானோ தாயகம் விரும்பி
தாகத்தோடு இருந்ததால்
தேச விடியல்
தேடும் கனவில் மூழ்கியதால்
நானும் என் வரியும்
மறைக்கப்பட்டோமோ
கொண்டாட மறுக்கப்பட்டோமோ
வட்டக்கச்சி வினோத்