கண்டெய்னர் லொரி ஒன்று பல்வேறு வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் கென்யாவில் 48பேர் உயிரிழந்தனர்.
வேகமாக வந்த அந்த லொரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி மினிபஸ்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதும், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.