உலகிலேயே மிகப் பழமையான பத்திரிகை என்ற பெருமையைப் பெற்ற Wiener Zeitung தனது வெயியீட்டை நிறுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவின் வியன்னாவை தளமாகக் கொண்டு இயங்கிய Wiener Zeitung,கடந்த 30ஆம் திகதி தனது இறுதி செய்தித்தாளை வௌியிட்டது.
கிட்டத்தட்ட 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்த அரசுக்கு சொந்தமான Wiener Zeitung பத்திரிகை நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
Wiener Zeitung வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது செய்தித்தாளின் முகப்புப் பக்கத்தில், 116,840 நாட்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என அச்சிட்டு, தனது பத்திரிகைக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்திக்கொண்டது.
Wiener Zeitung முகப்புப் பக்கம், டிவிட்டர் பக்கத்தில் தனது இறுதி பத்திரிகையின் முன் பக்கத்தை பகிர்ந்திருந்தது.
இதற்கு வியன்னாவை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர்.
The oldest newspaper in the world – the Wiener Zeitung – has been printed for the last time. This is the final front page pic.twitter.com/M28gHihw7W
— James Jackson (@derJamesJackson) June 30, 2023