நினைவிழந்து விண்பறந்து
வழிமறித்து துணிவறுத்து
மனமகிழ்ந்து உளம் குளிரும்
கேடு கெட்ட மானிடமும்
முகம் மலர்ந்து உளம் சுருங்கி
புறம் கதைத்து மனம் வெதும்பி
உன மனதுடைத்து வீழ்ச்சிகாண
எண்ணிடும் உன் உறவுகளும்
அழகறிந்து சலனடைந்து உன்
இடம் வழிந்து உனையடைய
தினம் முயன்றுன் பணிதடுத்து
பின்னால் அலையும் கிராதகரும்
முகம் மறைத்து தலைகுனிந்து
தினம் சமைத்து கலன் கழுவி
படிப்புடைத்து மணம்முடித்து
உனை கட்டிப்போடும் நடைமுறையும் உனைவிடா
சிறகொடிந்து மனம்குழைந்து
உடல்பயந்து உன் கனம் இழந்து
தினம் வெருண்டு நிஜமிழந்து
ஒடுங்கிப்போகாதே…
உலகழந்து ரணம் கடந்து
இயல் சிறந்து இயல்படைந்து
திறன்வளர்த்து தினம் வளர்ந்து
உன் தடம்பதிப்பாய் பெண்ணே.
டர்சன்