அதிக வெப்பத்தினால் இதுவரை 100க்கும் மேற்பட்டவர் மரணம் . இன்றைய காலநிலை மாற்றங்கள் உலகின் பலப்பகுதியில் தாக்கம் செலுத்தி வரும் நிலையில் மெக்சிகோ நாட்டில் அதிக வெப்ப நிலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவின் வடமேற்கில் உள்ள சோனோராவில் அதிகளவாக 120 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்நாட்டில் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 104 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீட்ஸ்ட்ரோக், நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் நேரிட்டதாக மெக்சிகோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.