செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விகாரைகளை இடித்தே கோயில்கள் அமைப்பாம்! – தேரர் கண்டுபிடிப்பு

விகாரைகளை இடித்தே கோயில்கள் அமைப்பாம்! – தேரர் கண்டுபிடிப்பு

1 minutes read

“வடக்கு – கிழக்கில் கட்டப்பட்டுள்ள கோயில்கள், புராதன விகாரைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளன. அத்துடன் இங்கு மீட்கப்பட்ட கல்வெட்டுக்களின் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் இருந்தமை தெளிவாகின்றது.”

– இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் தொல்லியல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல்லாவல மேதானந்த தேரர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

“கந்தரோடையில் மட்டும் 50 தூபிகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. வடக்கில் மீட்கப்பட்ட கல்வெட்டுக்களின் மூலம் கடந்த காலங்களில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பொலநறுவை இராஜதானியை ஆண்ட முதலாம் மகா பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் ஊர்காவற்றுறை துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் வர்த்தகம் நடந்தமை கல்வெட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

துறைமுக விதிகள் குறித்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டது. அந்தக் கல்வெட்டு தற்போது நாகபூசணி அம்மன் கோயிலில் உள்ளது. கல்வெட்டின் இறுதியில் சமஸ்கிருதத்தில் ‘மஹா பராக்கிரமபாகு சகல சிங்களச் சக்கரவர்த்தி’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இலங்கையில் தமிழர் தாயகம் இல்லை. அப்படி நிரூபிக்க யாரேனும் இருந்தால் நான் பதில் சொல்லத் தயார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான பழைய கோயில்கள் பண்டைய பௌத்த தலங்களில் கட்டப்பட்டுள்ளன. சில பண்டைய பௌத்த புனித ஸ்தலங்களிலிருந்து கலைப்பொருட்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரைக்கு ஆறு முறை சென்றிருக்கிறேன். 1964 இல் முதன்முதலில் சென்றேன். அந்தப் பகுதியில் ஒரேயொரு தமிழன் வாழ்ந்தான். குருந்தூர் மலை இடிபாடுகளை நமக்குக் காட்டியவர் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்தவர். குருந்தூர்மலை தொல்லியல் தளத்துக்கு முதல்முறை சென்றபோது, ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கல்வெட்டு அழிக்கப்பட்டது.

குருந்தூர்மலை விகாரையின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க மூன்றாம் மிஹிந்து மன்னர் வந்ததாக அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கிராமத்தில் ஒரு சிறிய ஏரி உருவாக்கப்பட்டது. கல்வெட்டின் படி ஏரியின் பெயர் குருந்த வாபி. அந்த ஏரி தற்போது தண்ணிமுறிப்பு ஏரி என அழைக்கப்படுகின்றது. பின்னர் தமிழ்க் கிராமங்கள் தோன்றியதன் மூலம் மக்கள் தண்ணிமுறிப்பு ஏரியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பௌத்த புனித தளத்துக்கு உரிமை கோர வரவில்லை. இடிபாடுகள் சேதமடையவில்லை. சமீபகாலமாகத்தான் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர்.” – என்றார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More