பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தாய் நிறுவனமாக மெட்டா திகழ்கிறது.
இந்த மெட்டா நிறுவனம், hreads என்ற மைக்ரோ பிளாக்கிங் செயலியை, நாளை மறுதினம் (06) அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள், இந்தச் செயலியிலும் தங்களுக்குப் பிரியமான கணக்குகளை பின் தொடரலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராமில் உள்ள அதே பயனர் பெயரை (Username) வைத்திருக்கவும் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டர் பக்கத்தில் அதன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் எலான் மஸ்க் செய்யும் மாற்றங்களுக்கு விமர்சனங்கள் குவியும் நிலையிலே, மெட்டா நிறுவனம் தனது புதிய செயலியை அறிமுகம் செய்ய முனைவது குறிப்பிடத்தக்கது.
Threads செயலி ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி எப்போது அறிமுகம் செய்யப்படும் என மெட்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.