உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து, Apple, Levi’s உட்பட பல நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறிவிட்டன.
எனினும், Dove சவர்க்காரம் ஆகியவற்றைத் தயாரிக்கும் பிரபல Unilever நிறுவனம், ரஷ்யாவில் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் தனது முடிவில் மாற்றம் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.
ரஷ்யச் சந்தையிலிருந்து வெளியேறுவது அவ்வளவு எளிதானது அல்லை என்று Unilever கூறியுள்ளது.
அவ்வாறு வெளியேறினால், தனது நடவடிக்கைகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்று நடத்தும் என்றும் தினசரி உணவு மற்றும் சுகாதாரப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே அங்கு விற்பதாக Unilever குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அது பெரும்பாலான பொருள்களைத் தொடர்ந்து ரஷ்யாவில் தயாரித்து விற்பதாக Moral Rating Agency என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை, ஆண்டுதோறும் Unilever நிறுவனம், ரஷ்யப் பொருளாதாரத்திற்கு 579 மில்லியன் பவுண்ட் பங்களிப்பதாக BBC செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.