மலையகத்தில் மீண்டும் சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சென் ஜோன் டிலரி, நோர்வூட் மற்றும் கிளங்கன் ஆகிய பகுதிகளில் 14 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று (08) காலை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அதன்படி, சென்ஜோன் டிலரி பகுதியில் 10 பேரும், நோர்வூட் மற்றும் கிளங்கன் பகுதிகளில் 4 பேரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 14 பேரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.