பிரான்ஸ் தலைநகரில் பொலிஸாரின் தடையை மீறி வன்முறைக்கு எதிராகச் சுமார் 2,000 பேர் நினைவுப் பேரணியை நடத்தினர்.
பாரிஸ் புறநகர்ப் பகுதியில் அண்மையில் பொலிஸாரால் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, பிரான்ஸின் பல இடங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், இப்போது மக்கள் பொலிஸ் வன்முறை எதிர்ப்பு நினைவுப் பேரணியை நடத்துகின்றனர்.
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கறுப்பின பிரெஞ்சு நபரான அடாமா டிராவ்ரெ உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது அவருடைய குடும்பத்தினர் சட்டவிரோத நினைவுப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னதாக, பொது அமைதிக்குப் பாதிப்பு நேரும் சாத்தியம் அதிகம் என்பதால் பேரணியை அனுமதிக்கமுடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.