0
வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடர் இலங்கையில் நேற்று (13.07.2023) ஆரம்பமான பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை ஏ அணி 48 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணி அவிஷ்க பெர்னாண்டோவின் அபார சதத்தின் மூலம் 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது.