புதைக்கப்பட்ட எம் தோழர்களே உங்கள்
கனவுகள் களவாடியது என்ரீரோ
எழுதப்படாத விதிகளை கடந்து உம்
கனவுகள் காற்றாக எம்
சுவாசமாகியது
காதலித்த களங்கள் உங்கள் பெயர் சொல்லவே
காத்திருக்கு ஒருநாள் தீபங்கள் எரியும் நாள் நாழிகை தப்பாது உங்கள் நாமம் கூறவே என்றிருக்கும்
கார்த்திகை மலர்களும் உங்கள் காலடி பணிய
தவமிருந்து சுவாசிக்கிறது
கார்த்திகை பூக்களை கண்டவுடன் தோன்றும்
உம் கல்லறைகள் வாசம்
செதில் செதிலாக நொறுக்கப்பட்டது கற்களே
தவிர கனவுகளையல்ல
புரியாத புதிர்களாய் சரிந்தது சாபமல்ல
ஓர் சரித்திரம் இனமானம் காக்க போராடி மடிந்த மகத்தான மாவீரன் எங்குண்டு
காரிருள் கானகத்திலும் பகைவன் கதிகலங்கி வாய் பிளந்து சரிந்தான் உன் கைப்பிடி கணை சொல்லும் உன் குறி
நெஞ்சில் எம் இனமானம் காத்திடவும்
களம் கண்ட பெரு மறவரகூட்டம்
உம் கனவுகளை தாங்கியபடி வழிப்போக்கனாய் வாழும் உம்மவர்
எழுதப்படாத விதிகளாய்…!
கேசுதன்