கடந்த ஒக்டோபரில் எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியதில் இருந்து ட்விட்டர் அதன் விளம்பர வருவாயில் 50 சதவீதத்தை இழந்துள்ளதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட விற்பனையின் அதிகரிப்பை நிறுவனம் காணவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், ட்விட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. இதனால் ட்விட்டர் இன்னும் பணத்தை இழக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
2022 இல் ட்விட்டரின் 7,500 ஊழியர்களில் பாதிப் பேரை எலோன் மஸ்க் பணிநீக்கம் செய்தார்.
இதேவேளை, சில மதிப்பீடுகளின்படி, போட்டி த்ரெட்ஸ் இப்போது 150 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.