ஈரான் அடிப்படைவாத அரசு மீண்டும் ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளது.
மஹாசா அம்மினி என்ற இளம் பெண் ஹிஜாப் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஹிஜாப் கட்டாயச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பல பெண்கள் தாக்கப்பட்டும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் சிறைப்படுத்தப்பட்டும் துன்பம் அனுபவித்ததாக புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து 10 மாதங்களாக ஹிஜாப் சட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் அச்சட்டத்தை அமல்படுத்த ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
போராட்டத்தில் ஈடுபடுவோர் தேர்தலில் நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலுக்கு தங்கள் வேட்பு மனுவை அளித்தால் அது நிராகரிக்கப்படலாம் என்பதால் பல சீர்திருத்தவாதிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.