உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டுகளின் பட்டியலை Henley Passport Index வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டாக சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலிடம் பிடித்துள்ளது.
Henley Passport Index, 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளை மதிப்பிட்டு, அவற்றை வரிசைப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் கடவுச்சீட்டைக் கொண்டு 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்று கூறப்பட்டது.
அது முன்னர், சிங்கப்பூர் கடவுச்சீட்டு 2ஆம் இடத்தில் இருந்தது.
5 ஆண்டுகளாக முதலிடம் பிடித்த ஜப்பான் தற்போது மூன்றாம் இடத்துக்குச் சென்றுள்ளது. ஜப்பான் கடவுச்சீட்டைக் கொண்டு 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும்.
இரண்டாம் இடத்தில் ஜெர்மனி கடவுச்சீட்டு இடம்பிடித்துள்ளது. இதன்மூலம், விசா இல்லாமல் 190 இடங்களுக்குச் செல்ல முடியும்
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தகவலைக் கொண்டு, கடவுச்சீட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.