செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் | சுமந்திரன்

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் | சுமந்திரன்

1 minutes read

பொலிஸ்அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.

அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் எங்கள் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த தயாரில்லை என்றால் அது 13ற்க்கு  அப்பால் செல்வதற்கு இலங்கை அரசிற்கு அரசியல் உறுதிப்பாடு இல்லை என்பதுதான் அர்த்தம்  எனதமிழ்தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏசுமந்திரன் இந்துநாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  இடையிலான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யோசனைகளை நாங்கள்முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும்தெரிவித்துள்ளதாவது.

21ம் திகதி இந்தியாவிற்கான ரணில்விக்கிரமசிங்கவின் விஜயத்திற்கு முன்னதாக அவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளமையும்,13வது திருத்தம் குறித்த ஜனாதிபதியின் நிலைப்பாடும்  முக்கியத்துவம் பெருகின்றது.

1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையை தொடர்ந்து சட்டமாக மாறிய 13வது திருத்தசட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது.

சுயநிர்ணய உரிமைக்கான இலங்கை தமிழர்களின் கோரிக்கையை தொடர்ந்து சில அதிகாரப்பகிர்விற்கான ஒரேயொரு சட்ட உத்தரவாதமாக அது காணப்படுகின்றது.

எனினும் 13வது திருத்தம் சிங்களமக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் உட்பட 9 மாகாணங்களுக்கும்  அதிகாரங்களை பகிர்வதற்கு முயல்கின்றது.

கொழும்பின் தொடர்ந்துவந்த ஆட்சியாளர்கள் பொலிஸ் காணி அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளனர்.

எனினும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் வடக்குகிழக்கில்

 

செவ்வாய்கிழமை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தவேளை ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க உண்மையை கண்டறியும் பொறிமுறைகள் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது அரசாங்கத்தின் திட்டங்களை கோடிட்டுக்காட்டும் ஜனாதிபதி பகிர்ந்துகொண்டுள்ளார்.

அபிவிருத்தி திட்டங்களில் கடந்த காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட பலாலி விமானநிலையம் காங்கேசன்துறைதுறைமுகம் மற்றும் அதிகளவு பேசப்பட்ட இன்னமும் நடைமுறைக்குவராத  தென்னிந்தியாவிற்கும் வடபகுதிக்கும் இடையிலான படகுசேவைகள் போன்றவையும் காணப்பட்டன.

16பக்க ஆவணத்தின் சிறிய  பகுதியொன்று பொலிஸ் அதிகாரங்கள் இன்றி 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கின்றது.

 

மாகாணசபைகளிற்கு வழங்கப்;பட்ட சில விடயங்கள் இன்னமும் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளன அந்த விடயங்கள் மாகாணசபைகளின் கீழ் வருவதற்கு சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட ஆவணம் தெரிவித்துள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More