மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அரசியல்வாதிகள் ஐவர் மற்றும் ஒரு விமானி என 6 பேர் மரணித்துள்ளனர்.
மரணித்த அரசியல்வாதிகள் ஐவரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.
குறித்த விமானம், விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காகச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து டிவிட்டரில் அக்கட்சி வருத்தம் தெரிவித்தது.
அவர்கள் அனைவரும் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.