சீயான் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ எனும் திரைப்படத்திலிருந்து ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நட்சத்திர நடிகரும், இயக்குநருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
இதில் சீயான் விக்ரம், ரித்து வர்மா, இரா பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி , வம்சி கிருஷ்ணா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் பரஹாம்சா, எஸ். ஆர். கதிர், விஷ்ணு தேவ் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
புலனாய்வு அதிகாரி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒன்றாக் என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்திருக்கிறார்.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்…’ எனத் தொடங்கும் பாடல் மற்றும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியரும், பாடகருமான பால் டப்பா எழுதி, பாடியிருக்கிறார். துள்ளலிசையில் அமைந்திருக்கும் இந்த திரைப்பட பாடல் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்திருக்கிறது.