ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல’ நூல் முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கட்டுள்ளது.
போராட்டம் கடுமையாக இடம்பெற்ற காலத்தில்கூட வடக்கு கிழக்கின் கல்வி வீதம் கொழும்புக்கு சவால் விடுமளவுக்கு உச்சத்தில் இருந்தது. ஆனால் இன்று கடைநிலையில் 24 ஆக முல்லையும் 25 ஆக கிளிநொச்சியும் ஆகியுள்ளது.
ஈழத்தமிழர்களாகிய எம்மிடம் உள்ள கடைசி ஆயுதம் கல்வியே.. அவ் ஆயுதமும் அரசாங்கத்தின் திட்டமிட்ட இனவழிப்பால் இல்லாமல்போகிறது. ஈழதேசத்து குழந்தைகள் மீண்டும் ஒருமுறை கல்விப்புரட்சி நிகழ்த்த “பள்ளிக்கூடங்கள் வெறும் கட்டடக்கூடுகள் அல்ல” கல்வி சார் விழிப்புணர்வு நூல் வழங்கப்பட்டது.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய இந்த நூலை டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா நினைவாக ஜீவநதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முல்லைதீவு மாவட்டத்தின் மல்லாவி, பாலிநகர் மற்றும் கோட்டைகட்டியகுளம் பிரதேசத்திலிருந்து யாழ்பல்கலைக்கழகம் சென்ற வ.கலையரசி, கி.அலெக்ஷன், சி.கருணிகா, யோ.துசாந்தன், ப.கயல்விழி, அ. ராதிகா, ச.சாலினி ஆகிய மாணவ மாணவிகளால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வை கி. அலெக்ஷன் ஒருங்கிணைப்பு செய்தார்.
மல்லாவி மத்திய கல்லாரி தேசிய பாடசாலை, துணுக்காய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, உயிலங்குளம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம், பாலிநகர் மகாவித்தியாலயம். முதலிய பாடசாலைகளுக்கு பள்ளிக்கூடங்களது முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நூல் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களும் மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர்,ஆசிரியர் குழாமிற்கும் இடையில் பாடசாலைகளது தேவை, கல்வி வளர்ச்சிக்கான பாதைகள் பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.